Senthamil.Org

மறையது

தேவாரம்

மறையது பாடிப் பிச்சைக் 
கென்றகந் திரிந்து வாழ்வார் 
பிறையது சடைமு டிமேற் 
பெய்வளை யாள்தன் னோடுங் 
கறையது கண்டங் கொண்டார் 
காஞ்சிமா நகர்தன் னுள்ளால் 
இறையவர் பாட லாடல் 
இலங்குமேற் றளிய னாரே.
மறையது எனத்தொடங்கும் தேவாரம்