Senthamil.Org

மறுத்தானோர்

தேவாரம்

மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து 
முடியினொடு தோளுந் தாளும் 
இறுத்தானை எழில்முளரித் தவிசின்மிசை 
இருத்தான்றன் தலையி லொன்றை 
அறுத்தானை ஆரூரில் அம்மானை 
ஆலாலம் உண்டு கண்டங் 
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க 
இரும்புகடித் தெய்த்த வாறே.
மறுத்தானோர் எனத்தொடங்கும் தேவாரம்