மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும் பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலுஞ் செறிவுடை அங்க மாலை சேர்திரு வுருவர் போலும் எறிபுனற் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.