Senthamil.Org

மறியுடை

தேவாரம்

மறியுடை யான்மழு வாளினன் 
மாமலை மங்கையோர்பால் 
குறியுடை யான்குண மொன்றறிந் 
தாரில்லை கூறிலவன் 
பொறியுடை வாளர வத்தவன் 
புஜந்துருத் தியுறையும் 
அறிவுடை ஆதி புராணனை 
நானடி போற்றுவதே.
மறியுடை எனத்தொடங்கும் தேவாரம்