Senthamil.Org

மறியிலங்கு

தேவாரம்

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் புஜதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
மறியிலங்கு எனத்தொடங்கும் தேவாரம்