Senthamil.Org

மருவார்

தேவாரம்

மருவார் குழலி மாதோர் பாகமாய்த் 
திருவார் செம்பொன் பள்ளி மேவிய 
கருவார் கண்டத் தீசன் கழல்களை 
மருவா தவர்மேல் மன்னும் பாவமே.
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
மருவார் கொன்றை மதிசூடி 
மாணிக் கத்தின் மலைபோல 
வருவார் விடைமேல் மாதோடு 
மகிழ்ந்து புஜதப் படைசூழத் 
திருமால் பிரமன் இந்திரற்குந் 
தேவர் நாகர் தானவர்க்கும் 
பெருமான் கடவுஜர் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே.
மருவார் எனத்தொடங்கும் தேவாரம்