Senthamil.Org

மருவலர்

தேவாரம்

மருவலர் புரமெரி யினின்மடி 
தரவொரு கணைசெல நிறுவிய 
பெருவலி யினன்நலம் மலிதரு 
கரனுர மிகுபிணம் அமர்வன 
இருளிடை யடையுற வொடுநட 
விசையுறு பரனினி துறைபதி 
தெருவினில் வருபெரு விழவொலி 
மலிதர வளர்திரு மிழலையே.
மருவலர் எனத்தொடங்கும் தேவாரம்