Senthamil.Org

மயக்கமாய்த்

தேவாரம்

மயக்கமாய்த் தெளிவு மாகி 
மால்வரை வளியு மாகித் 
தியக்கமாய் ஒருக்க மாகிச் 
சிந்தையுள் ஒன்றி நின்று 
இயக்கமாய் இறுதி யாகி 
எண்டிசைக் கிறைவ ராகி 
அயக்கமாய் அடக்க மாய 
ஐவர்ஆப் பாடி யாரே.
மயக்கமாய்த் எனத்தொடங்கும் தேவாரம்