மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக் கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினாற் பொன்றியும் போகப் புரட்டினன் புஜந்துருத் தியுறையும் அன்றியுஞ் செய்த பிரான்றனை யானடி போற்றுவதே.