Senthamil.Org

நிலையவன்காண்

தேவாரம்

நிலையவன்காண் தோற்றவன்காண் நிறையா னான்காண் நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்த சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை யொருபாகஞ் சேர்த்தி னான்காண் கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக் கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
நிலையவன்காண் எனத்தொடங்கும் தேவாரம்