Senthamil.Org

நிலனொடு

தேவாரம்

நிலனொடு வானும் நீரொடு தீயும் 
வாயுவு மாகியோ ரைந்து 
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த 
புண்ணியர் வெண்பொடிப் புஜசி 
நலனொடு தீங்குந் தானல தின்றி 
நன்கெழு சிந்தைய ராகி 
மலனொடு மாசும் இல்லவர் வாழும் 
மல்கு பெருந்துறை யாரே.
நிலனொடு எனத்தொடங்கும் தேவாரம்