Senthamil.Org

நிறைவிலேன்

தேவாரம்

நிறைவிலேன் நேச மில்லேன் 
நினைவிலேன் வினையின் பாச 
மறைவிலே புறப்பட் டேறும் 
வகையெனக் கருளெ னெம்மான் 
சிறையிலேன் செய்வ தென்னே 
திருவடி பரவி யேத்தக் 
குறைவிலேன் குற்றந் தீராய் 
கொன்றைசேர் சடையி னானே.
நிறைவிலேன் எனத்தொடங்கும் தேவாரம்