Senthamil.Org

நிறைவார்ந்த

தேவாரம்

நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
மறையானை மாசொன் றிலாதான் றன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக்
கறையானைக் காதார் குழையான் றன்னைக்
கட்டங்க மேந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.
நிறைவார்ந்த எனத்தொடங்கும் தேவாரம்