Senthamil.Org

நிறைமறைக்

தேவாரம்

நிறைமறைக் காடு தன்னில் 
நீண்டெரி தீபந் தன்னைக் 
கறைநிறத் தெலிதன் மூக்குச் 
சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் 
நீண்டவா னுலக மெல்லாங் 
குறைவறக் கொடுப்பர் போலுங் 
குறுக்கைவீ ரட்ட னாரே.
நிறைமறைக் எனத்தொடங்கும் தேவாரம்