Senthamil.Org

நிறவுரு

தேவாரம்

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற 
தொருநீர்மை சீர்மை நினையார் 
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும் 
அறியாத அண்ணல் நகர்தான் 
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை 
புனைகொன்றை துன்று பொதுளி 
நறவிரி போதுதாது புதுவாச நாறும் 
நனிபள்ளி போலு நமர்காள்.
நிறவுரு எனத்தொடங்கும் தேவாரம்