Senthamil.Org

நிருத்தனை

தேவாரம்

நிருத்தனை நிமலன் றன்னை 
நீணிலம் விண்ணின் மிக்க 
விருத்தனை வேத வித்தை 
விளைபொருள் மூல மான 
கருத்தனைக் கடல்சூழ் நாகைக் 
காரோணங் கோயில் கொண்ட 
ஒருத்தனை உணர்த லால்நாம் 
உய்ந்தவா நெஞ்சி னீரே.
நிருத்தனை எனத்தொடங்கும் தேவாரம்