Senthamil.Org

நின்றுலா

தேவாரம்

நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு 
புரமூன்றும் நீள்வாயம்பு 
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி 
மலையாளி சேருங்கோயில் 
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச 
மலர்பாய்ந்து வாசமல்கு 
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு 
கண்வளருந் திருவையாறே.
நின்றுலா எனத்தொடங்கும் தேவாரம்