Senthamil.Org

நின்போல்

தேவாரம்

நின்போல் அமரர்கள் நீண்முடி 
சாய்த்து நிமிர்த்துகுத்த 
பைம்போ துழக்கிப் பவளந் 
தழைப்பன பாங்கறியா 
என்போ லிகள்பறித் திட்ட 
இலையும் முகையுமெல்லாம் 
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ 
யாறன் அடித்தலமே.
நின்போல் எனத்தொடங்கும் தேவாரம்