Senthamil.Org

நினைக்கின்றேன்

தேவாரம்

நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் 
நீண்டபுன் சடையி னானே 
அனைத்துடன் கொண்டு வந்தங் 
கன்பினால் அமைய வாட்டிப் 
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை 
மெய்ம்மையைப் புணர மாட்டேன் 
எனக்குநான் செய்வ தென்னே 
இனிவலம் புரவ னீரே.
நினைக்கின்றேன் எனத்தொடங்கும் தேவாரம்