Senthamil.Org

நிணம்படும்

தேவாரம்

நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன் 
நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன் 
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங் 
கருத்தினாற் கைதொழு தெழுவேன் 
பணம்படும் அரவம் பற்றிய கையர் 
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் 
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில் 
இவரலா தில்லையோ பிரானார்.
நிணம்படும் எனத்தொடங்கும் தேவாரம்