Senthamil.Org

நிணத்திடை

தேவாரம்

நிணத்திடை யாக்கை பேணி 
நியமஞ்செய் திருக்க மாட்டேன் 
மணத்திடை ஆட்டம் பேசி 
மக்களே சுற்ற மென்னுங் 
கணத்திடை ஆட்டப் பட்டுக் 
காதலால் உன்னைப் பேணுங் 
குணத்திடை வாழ மாட்டேன் 
கோவல்வீ ரட்ட னீரே.
நிணத்திடை எனத்தொடங்கும் தேவாரம்