Senthamil.Org

நிணங்குடர்

தேவாரம்

நிணங்குடர் தோல்நரம் பென்புசேர் 
ஆக்கைதான் நிலாய தன்றால் 
குணங்களார்க் கல்லது குற்றம்நீங் 
காதெனக் குலுங்கி னாயே 
வணங்குவார் வானவர் தானவர் 
வைகலும் மனங்கொ டேத்தும் 
அணங்கனா ரூர்தொழு துய்யலாம் 
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
நிணங்குடர் எனத்தொடங்கும் தேவாரம்