Senthamil.Org

நாவிரித்தரன்

தேவாரம்

நாவிரித்தரன் தொல்புகழ்பல 
பேணுவீரிறை நல்குமின் 
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர் 
வீரட்டத்துறை கண்ணுதல் 
கோவிரிப்பயன் ஆன்அஞ்சாடிய 
கொள்கையுங்கொடி வரைபெற 
மாவரைத்தலத் தாலரக்கனை 
வலியைவாட்டிய மாண்பதே.
நாவிரித்தரன் எனத்தொடங்கும் தேவாரம்