Senthamil.Org

நாளும்

தேவாரம்

நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் 
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும் 
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே 
கோளி லியரன் பாதமே கூறுமே.
நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனுர் 
நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங் 
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் 
வேளார் நாட்டுவே @ர்விளத் தூர்நாட்டு விளத்தூரே.
நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் 
 ஞான சம்பந்த னுக்குல கவர்முன் 
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந் 
 தன்மை யாளனை என்மனக் கருத்தை 
ஆளும் புஜதங்கள் பாடநின் றாடும் 
 அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங் 
கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக் 
 கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
நாளும் எனத்தொடங்கும் தேவாரம்