Senthamil.Org

நானுடை

தேவாரம்

நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை 
 நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத் 
தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத் 
 தேவர்கள் நாயகனைப் புஜவுயர் சென்னியனை 
வானிடை மாமதியை மாசறு சோதியனை 
 மாருத மும்மனலும் மண்டல மும்மாய 
கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ 
 கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
நானுடை எனத்தொடங்கும் தேவாரம்