Senthamil.Org

நாத்தான்

தேவாரம்

நாத்தான் உன்றிற மேதிறம் பாது 
 நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும் 
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும் 
 அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ் 
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித் 
 துருவி மால்பிர மன்னறி யாத 
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
நாத்தான் எனத்தொடங்கும் தேவாரம்