Senthamil.Org

நாதனுக்

தேவாரம்

நாதனுக் கூர்நமக் கூர்நர 
சிங்க முனையரையன் 
ஆதரித் தீசனுக் காட்செயும் 
ஊரணி நாவலூரென் 
றோதநற் றக்கவன் றொண்டனா 
ரூரன் உரைத்ததமிழ் 
காதலித் துங்கற்றுங் கேட்பவர் 
தம்வினை கட்டறுமே.
நாதனுக் எனத்தொடங்கும் தேவாரம்