Senthamil.Org

நாகத்தை

தேவாரம்

நாகத்தை நங்கை அஞ்ச 
நங்கையை மஞ்ஞை யென்று 
வேகத்தைத் தவிர நாகம் 
வேழத்தின் உரிவை போர்த்துப் 
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் 
திங்களை மின்னென் றஞ்சி 
ஆகத்திற் கிடந்த நாகம் 
அடங்கும்ஆ ரூர னார்க்கே.
நாகத்தை எனத்தொடங்கும் தேவாரம்