Senthamil.Org

நல்லான்காண்

தேவாரம்

நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த வில்லான்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண் மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச் சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண் தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
நல்லான்காண் எனத்தொடங்கும் தேவாரம்