Senthamil.Org

நலங்கொள்

தேவாரம்

நலங்கொள் காழி ஞான சம்பந்தன் 
குலங்கொள் கோலக் காவு ளானையே 
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் 
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.
நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.
நலங்கொள் புஜம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன் 
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை 
இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார் 
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க வுஜன்றிவைத் தார்வன்னி யூரரே.
நலங்கொள் எனத்தொடங்கும் தேவாரம்