Senthamil.Org

நறுமலராய்

தேவாரம்

நறுமலராய் நாறு மலர்ச்சேவடி 
நடுவாய் உலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமு மாயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.
நறுமலராய் எனத்தொடங்கும் தேவாரம்