Senthamil.Org

நரைப்பு

தேவாரம்

நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
 நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன் 
அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன் 
 அஞ்சி னேன்நம னாரவர் தம்மை 
உரைப்பன் நானுன சேவடி சேர 
 உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத 
இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய் 
 இடைம ருதுறை எந்தைபி ரானே.
நரைப்பு எனத்தொடங்கும் தேவாரம்