Senthamil.Org

நரியார்தங்

தேவாரம்

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான 
 பரிசொழிந்து நாளும் உள்கிப் 
பிரியாத அன்பராய்ச் சென்றுமுன் 
 அடிவீழுஞ் சிந்தை யாரைத் 
தரியாது தருமனார் தமர்செக்கில் 
 இடும்போது தடுத்தாட் கொள்வான் 
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் 
 பெருமானைப் பெற்றா மன்றே.
நரியார்தங் எனத்தொடங்கும் தேவாரம்