Senthamil.Org

நரம்பெழு

தேவாரம்

நரம்பெழு கைகள் பிடித்து 
நங்கை நடுங்க மலையை 
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான் 
ஒன்பதும் ஒன்றும் அலற 
வரங்கள் கொடுத்தருள் செய்வான் 
வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து 
நிரம்பு கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை.
நரம்பெழு எனத்தொடங்கும் தேவாரம்