Senthamil.Org

நமர்பிறர்

தேவாரம்

நமர்பிறர் என்ப தறியேன் 
 நான்கண்ட தேகண்டு வாழ்வேன் 
தமரம் பெரிதும் உகப்பன் 
 தக்கவா றொன்றும் இலாதேன் 
குமரன் திருமால் பிரமன் 
 கூடிய தேவர் வணங்கும் 
அமரன் இருப்பதும் ஆரூர்அவர் 
 எம்மையும் ஆள்வரோ கேளீர்.
நமர்பிறர் எனத்தொடங்கும் தேவாரம்