Senthamil.Org

நக்கன்காண்

தேவாரம்

நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த
நாதன்காண் புஜதகண மாட ஆடுஞ்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
நக்கன்காண் எனத்தொடங்கும் தேவாரம்