Senthamil.Org

நகைவலர்

தேவாரம்

நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர் 
நளிர்கங்கை தங்கு முடியர் 
மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல 
கறைகொள் மணிசெய் மிடறர் 
முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு 
மெரியாடு மாறு மிவர்கைப் 
பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு 
மிதுபோலும் ஈச ரியல்பே.
நகைவலர் எனத்தொடங்கும் தேவாரம்