Senthamil.Org

நகையார்வெண்

தேவாரம்

நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த 
நாதனிடம் நன்முத்தாறு 
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு 
கரையருகு மறியமோதி 
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு 
நீர்குவளை சாயப்பாய்ந்து 
முகையார்செந் தாமரைகள் முகம்மலர 
வயல்தழுவு முதுகுன்றமே.
நகையார்வெண் எனத்தொடங்கும் தேவாரம்