Senthamil.Org

தோளின்மிசை

தேவாரம்

தோளின்மிசை வரியரவம் நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையும் முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்புஜ
வாளைகுதி கொள்ளமடல் விரியமணம் நாறுமயி லாடுதுறையே.
தோளின்மிசை எனத்தொடங்கும் தேவாரம்