Senthamil.Org

தோலொடு

தேவாரம்

தோலொடு நுலிழை சேர்ந்தமார்பர் 
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ 
மால்புகை போய்விம்மு மாடவீதி 
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் 
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த 
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் 
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங் 
கணபதி யீச்சரங் காமுறவே.
தோலொடு எனத்தொடங்கும் தேவாரம்