Senthamil.Org

தோலுடை

தேவாரம்

தோலுடை யான்வண்ணப் போர்வையினான் 
சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு 
நுலுடை யானிமை யோர்பெருமான் 
நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங் 
காலுடை யான்கரி தாயகண்டன் 
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி 
மேலுடை யானிமை யாதமுக்கண் 
மின்னிடை யாளொடும் வேண்டினானே.
தோலுடை எனத்தொடங்கும் தேவாரம்