Senthamil.Org

தோடுலா

தேவாரம்

தோடுலா மலர்கள் தூவித் 
தொழுதெழு மார்க்கண் டேயன் 
வீடுநாள் அணுகிற் றென்று 
மெய்கொள்வான் வந்த காலன் 
பாடுதான் செல்லு மஞ்சிப் 
பாதமே சரண மென்னச் 
சாடினார் காலன் மாளச் 
சாய்க்காடு மேவி னாரே.
தோடுலா எனத்தொடங்கும் தேவாரம்