Senthamil.Org

தோடுடைய

தேவாரம்

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப் 
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன் 
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த 
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் 
காடுடையசுட லைப்பொடிபுஜசியென் னுள்ளங்கவர் கள்வன் 
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த 
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
தோடுடைய எனத்தொடங்கும் தேவாரம்