Senthamil.Org

தொழுவார்க்

தேவாரம்

தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய் 
சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய் 
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார் 
புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார் 
முழவா ரொலிபா டலோடா டலறா 
முதுகாடரங்கா நடமாட வல்லாய் 
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல் 
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
தொழுவார்க் எனத்தொடங்கும் தேவாரம்