Senthamil.Org

தொழற்கங்கை

தேவாரம்

தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் 
தோன்றி யருளவல் லானுங் 
கழற்கங்கை பன்மலர் கொண்டு 
காதல் கனற்றநின் றானுங் 
குழற்கங்கை யாளையுள் வைத்துக் 
கோலச் சடைக்கரந் தானும் 
அழற்கங்கை ஏந்தவல் லானும் 
ஆரூ ரமர்ந்தஅம் மானே.
தொழற்கங்கை எனத்தொடங்கும் தேவாரம்