Senthamil.Org

தொண்டிலங்கும்

தேவாரம்

தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் 
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
தொண்டிலங்கும் எனத்தொடங்கும் தேவாரம்