Senthamil.Org

தொண்டாய்ப்

தேவாரம்

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டா னிசைபாட நின்றார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
தொண்டாய்ப் எனத்தொடங்கும் தேவாரம்