Senthamil.Org

தொண்ட

தேவாரம்

தொண்ட ரிசைபா டியுங்கூடிக் 
கண்டு துதிசெய் பவனுராம் 
பண்டும் பலவே தியரோத 
வண்டார் மயிலா டுதுறையே.
தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.
தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ் 
 சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும் 
புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் 
 புஜச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங் 
கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங் 
 கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக் 
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன் 
 கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
தொண்ட எனத்தொடங்கும் தேவாரம்