Senthamil.Org

தேற்றப்

தேவாரம்

தேற்றப் படத்திரு நல்லூ 
ரகத்தே சிவனிருந்தாற் 
தோற்றப் படச்சென்று கண்டுகொள் 
ளார்தொண்டர் துன்மதியால் 
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் 
றேடிய ஆதரைப்போற் 
காற்றிற் கெடுத்துல கெல்லாந் 
திரிதர்வர் காண்பதற்கே.
தேற்றப் எனத்தொடங்கும் தேவாரம்