Senthamil.Org

தேய்ந்திலங்

தேவாரம்

தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி 
யாய்நின் திருச்சடைமேற் 
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக 
மாகிப் பரந்தொலிப்ப 
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை 
யாயடி யேற்குரைநீ 
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த் 
தானத் திருந்ததுவே.
தேய்ந்திலங் எனத்தொடங்கும் தேவாரம்